எழுத்தாளர் பற்றி · About
கவிப்பித்தன்
கவியில் காதல் கொண்டு சித்தம் சிதைந்தவன்
இப்படியெல்லாம் எழுத முடியுமா? — அந்த ஆர்வம்தான் இன்றுவரை என்னை எழுதவைக்கிறது.
இந்தத் தளத்தில் பிரசுரிக்கப்பட்ட கவிதைகள் வெவ்வேறு பருவத்தில், வெவ்வேறு காலகட்டத்தில், வெவ்வேறு இடங்களில் கண்டவை — அனுபவித்தவை, கோபம் கொண்டவை, மகிழ்ந்தவை, வியந்தவை.
கவிதையின் விதை
சிறுவயதில் என் அண்ணனின் கவிதைகளை படிக்கும்போது, சிலது புரியாமல் போனது. சிலது மொழியின் நுட்பத்தோடு இருந்தது — பழமொழி போல் ஒரு வரியில் பல அர்த்தங்கள், சில கவிதைகளில் ஒரு கதையே அடங்கி இருந்தது. அந்த அதிசயம்தான் என்னை கவிதையில் இழுத்தது.
இந்தத் தளத்தில்
வீரம்
காதல்
இயற்கை
சமூகம்
பெண்மை
தத்துவம்
வாழ்க்கை
இறப்பு
22+
கவிதைகள்
8
வகைகள்
100%
சொந்த படைப்பு
உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன — கவிதைகள் உங்கள் மனதை தொட்டாலும் முரண்பட்டாலும் சொல்லுங்கள்.
தொடர்புகொள்ளுங்கள் →
முகவுரை கவிதை · Mukavurai
கவி களவு செய்யோமே
எள்ளளவாய் உய்யோமே
எழுத்துரைத்தோன் இயல் கொடுத்தான்
எரியும் தழல் ஆனோமே
எங்ஙனம் யாம் சொல்வோமோ
எமை இகழ்ச்சி செய்தோரை
நன்றி சொல்லி வணங்குகிறோம்
— கவிப்பித்தன்
அரன் அறிவான் அது போதுமே – எம்
அரன் அறிவான் அது போதுமே.
